
நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக இணைந்து பணியாற்றும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அந்தக் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சூலூர் தொகுதியில் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவும், அரவக்குறிச்சி தொகுதியில் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், திருப்பரங்குன்றம் தொகுதியில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் 15 பேர் கொண்ட குழுவும், ஓட்டபிடாரம் (தனி) தொகுதியில் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு உள்பட்ட மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், துணை அமைப்புகளின் மாவட்டத் தலைவர்களும் ஒருங்கிணைப்புக் குழுக்களில் உறுப்பினர்களாக இணைந்து பணியாற்றுவர் என்று தனது அறிக்கையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.