புயல் ஆய்வு கூட்டம் நடத்த தடையில்லை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் புயல் ஆய்வு கூட்டம் நடத்த தடையில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துளளார். 
புயல் ஆய்வு கூட்டம் நடத்த தடையில்லை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் புயல் ஆய்வு கூட்டம் நடத்த தடையில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துளளார். 

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது அடுத்த 4 நாளில் புயலாக வலுவடைந்து வட தமிழகத்தை நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவான சூழலில் சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில்,
தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் புயல் ஆய்வு கூட்டம் நடத்த தடையில்லை. வாக்கு எண்ணும் மையங்களுக்கு புயலால் பாதிப்பு உள்ளதா என அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. புயல் தொடர்பாக முதல்வர், அமைச்சர்கள் ஆலோசனை நடத்தலாமா? என தலைமை தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com