
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவான சூழலில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது அடுத்த 4 நாளில் புயலாக வலுவடைந்து வட தமிழகத்தை நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபனி என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவான சூழலில் சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார். புயல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.