
விளையாட்டு வீரர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
ஆசிய தடகளப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த கோமதி, ஆரோக்கிய ராஜீவ் உள்ளிட்ட பல்வேறு இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து தங்கம், வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்று விளையாட்டுத் துறையில் சிறப்பாகப் பயிற்சி பெற்றிருக்கும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய-மாநில அரசுகள் திட்டங்கள் வகுத்து அவர்களுக்கான சலுகைகளை அளிக்க வேண்டும்.
இளைஞர்களும் விளையாட்டுத் துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் அளித்து திறமைகளை வளர்த்து சர்வதேச அளவில் பதக்கங்கள் பெற வேண்டுமென சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.