12 மணி நேரத்தில் ஃபானி புயல் உருவாகிறது: இந்திய வானிலை மையம் 

12 மணி நேரத்தில் ஃபானி புயல் உருவாகிறது: இந்திய வானிலை மையம் 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஃபானி புயலாக வலுப்பெறுகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

12 மணி நேரத்தில் ஃபானி புயல் உருவாகிறது: இந்திய வானிலை மையம் 
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஃபானி புயலாக வலுப்பெறுகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு தென்கிழக்கே 1,210 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

மணிக்கு 20 கி.மீ., வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஃபானி புயலாக வலுப்பெறுகிறது. புயல் 30ஆம் தேதி மாலை வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடற்கதை பகுதியை நெருங்கும்.

30ஆம் தேதி புயலின்போது 120 முதல் 145 கி.மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com