பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலி: ரயில்களில் 24 மணி நேர தொடர் சோதனை

பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களையும் போலீஸார் 24 மணி நேர
பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலி: ரயில்களில் 24 மணி நேர தொடர் சோதனை


ராமநாதபுரம்: பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களையும் போலீஸார் 24 மணி நேர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். 

இலங்கையில் சமீபத்தில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாக 19 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக கர்நாடக காவல்துறை சார்பில் தமிழக காவல்துறைக்கு தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக காவல்துறையின் எச்சரிக்கையை அடுத்து பாம்பன் ரயில் பாலம், பேருந்து பாலம் ஆகியவற்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மோப்பநாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். 

பாம்பன் பாலத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா், தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் 24 பேர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். 

இந்நிலையில், ராமநாதபுரம் வழியாக தினமும் பயணிகள் ரயில், விரைவு ரயில்கள் என 10 ரயில்கள் செல்கின்றன. அவற்றை தீவிர கண்காணிப்பு உள்படுத்துமாறு ரயில்வே உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதையடுத்து ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களையும் கூடுதல் நேரம் நிறுத்தி, அவற்றை பெட்டி, பெட்டியாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் சோதனையிட்டு வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையில் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் சோனையிடுவதால் ரயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் காரைக்குடி, திருச்சியிலிருந்து ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் 20 பேர் வரவழைக்கப்பட்டு ரயில் பெட்டிகளில் சோதனை தொடர்வதாக ரயில்வே துறை அதிகாரிள் கூறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com