வீட்டில் ஒரு குழந்தையாக மழலையா்களுடன் கொஞ்சி விளையாடும் அணில் குட்டி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கலிங்கபட்டி அருகே நடுப்பட்டியில் வசித்து வருகின்றனா் செந்தில்குமார், சரண்யா தம்பதியினா். செந்தில்குமார்
அணில் குட்டிக்கு பால் அளிக்கும் தீபிகா.
அணில் குட்டிக்கு பால் அளிக்கும் தீபிகா.



திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கலிங்கபட்டி அருகே நடுப்பட்டியில் வசித்து வருகின்றனா் செந்தில்குமார், சரண்யா தம்பதியினா். செந்தில்குமார் மணப்பாறை - குளித்தலை சாலையில் முறுக்கு உற்பத்தி தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்திலிருந்து கடந்த மாதத்தில் தாயை விட்டு பிரிந்த அணில் குட்டி ஒன்று செந்தில்குமார் வீட்டிற்கு வந்துள்ளது. அங்கு செந்தில்குமாரின் குழந்தைகள் தீபிகா, தனுஷ்கா ஆகியோருடன் கொஞ்சி விளையாடத் தொடங்கியது. குழந்தைகள் தங்களது கையில் இருந்த திராட்சை, கொய்யா பழங்களை அணில் குட்டிக்கு அளித்துள்ளனர். 

மழலையா்களின் பாசத்தில் தினமும் வீட்டிற்கு வருவதையும் அங்கு குழந்தைகளுடன் விளையாடுவதையும் அணில் குட்டி வாடிக்கையாக வைத்துள்ளது. குழந்தைகள் அளிக்கும் பால், பிஸ்கட் போன்றவற்றை சிறுபிள்ளையாக அடம்பிடித்து சாப்பிடுகிறது. 

வீட்டில் உள்ள அனைவரின் மீதும் ஏறி விளையாடும் அணில் குட்டி, அண்டை வீட்டு குழந்தைகளிடமும் பழகத் தொடங்கியுள்ளது. வீட்டில் உள்ள எலுமிச்சம் பழங்களை உருட்டி விளையாடும் அணில்குட்டி, அருகில் உள்ள மரத்திற்கு சென்று விட்டு பின் வீடு திரும்பிவிடுமாம். வீட்டில் மேற்கூரையில் ஒரு பகுதியினை அந்த அணில்குட்டி தனது உறக்கத்திற்கான இடமாக வைத்துள்ளது. 

பகலில் எங்கு சுற்றி திரிந்தாலும் இரவு மட்டும் நல்ல பிள்ளையாக வீட்டிற்கு வந்துவிடுகிறது. செந்தில்குமார் வீட்டில் குழந்தைகளுடன் குழந்தையாக மாறிவிட்ட அணில்குட்டி அப்பகுதி மழலையர்களின் செல்லப்பிள்ளையாக வளா்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com