Enable Javscript for better performance
மெட்ரோ ரயில் இயக்கம், பராமரிப்புப் பணி தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மெட்ரோ ரயில் இயக்கம், பராமரிப்புப் பணி தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம்

    By DIN  |   Published On : 29th April 2019 02:53 AM  |   Last Updated : 29th April 2019 02:53 AM  |  அ+அ அ-  |  

    chennaimetrotrain

    இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தனியாருக்கு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக விமானநிலையம் - வண்ணாரபேட்டை வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வழித்தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    இதற்கிடையில், இரண்டாவது கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்படவுள்ளது. மாதவரம்-சிறுசேரி, மாதவரம் -சோழிங்கநல்லூர் உள்பட 3 வழித்தடத்தில் திட்டப்பணிகள் பணிகள் நடைபெறவுள்ளன. இதில், 52 கி.மீ. வழித்தடப் பாதை திட்டப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளன.  இந்தப் பணிகள் வரும் 2025 அல்லது 2026-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும். வட சென்னை-தென் சென்னை பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை இருக்கும். 
    இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் இயக்கம், பராமரிப்புப்  பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், 2-ஆவது கட்டமாக உருவாக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்கள் பராமரிப்பு, இயக்கப் பணிகள் அனைத்தும் தனியார் ஊழியர்கள் நிர்வகிப்பார்கள்.  மும்பை, ஹைதராபாத், உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் மூலம் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல,  சென்னை மெட்ரோ 2-ஆவது கட்ட மெட்ரோ வழித்தடப் பாதை ரயில் நிலையங்களும் தனியார் பராமரிப்புக்கு  விடப்படுகிறது. இதன்மூலம் கூடுதல் செலவுகள் குறைக்கப்படுகின்றன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp