பத்தாம்  வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து 

பத்தாம்  வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பத்தாம்  வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து 

சென்னை: பத்தாம்  வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

பத்தாம்  வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் மாணவ  -மாணவிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதிய இந்த தேர்வில் மாணவியர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற செய்தி கூடுதல் மகிழ்ச்சி.

மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்த இந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டமாக திருப்பூர் முதலிடத்திற்கு வந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வு பெற்ற மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது மேல்படிப்பிற்கு ஏற்ப, விருப்பமுள்ள பாடங்களை பிளஸ் ஒன் வகுப்பில் தேர்வு செய்து- தாங்கள் தேர்வு செய்த துறையில் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தேர்ச்சி பெறாத மாணவ - மாணவிகளுக்கு மறு கூட்டல்,  “சிறப்பு துணை தேர்வுகள்” போன்ற வாய்ப்புகள் இருப்பதால் - எவ்வித அவசர முடிவுகளுக்கும் ஆட்பட்டு விடாமல் தங்களது எதிர்காலத்தை நம்பிக்கையுடன்  முன்னெடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com