எம்பிபிஎஸ்: முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின. கல்லூரிகளுக்கு புதிதாக வந்த மாணவ, மாணவியர்களை மூத்த மாணவர்கள் வரவேற்றனர்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவ, மாணவியரை வியாழக்கிழமை  வரவேற்ற  மூத்த மாணவியர்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவ, மாணவியரை வியாழக்கிழமை  வரவேற்ற  மூத்த மாணவியர்.


அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின. கல்லூரிகளுக்கு புதிதாக வந்த மாணவ, மாணவியர்களை மூத்த மாணவர்கள் வரவேற்றனர்.
மலர்கள் மற்றும் பரிசுப் பொருள்களை அளித்தும், மரக் கன்றுகளை நட்டும் அவர்கள் தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர். மாநிலத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவை தவிர, பெருந்துறை ஐஆர்டி, சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரிகளையும் அரசு ஏற்று நடத்துகிறது.  மொத்தம் 3,350 இடங்கள் உள்ளன. அவற்றுக்கான  கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
 இந்த நிலையில், முதலாம் ஆண்டு வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் முதலாமாண்டு மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுரிதார் போன்ற ஆடைகளை  அணிந்து வந்தனர்.
மாணவர்களைப் பொருத்தவரை பார்மல்  சட்டை, பேண்ட் அணிந்தும், ஷூ அணிந்தும் கல்லூரிகளுக்கு வந்தனர்.  சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்பதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர்களும், பேராசிரியர்களும் பங்கேற்றனர்.அப்போது முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்ய மாட்டோம்; தோழமையுடன் இருப்போம் என மூத்த மாணவர்கள் உறுதிமொழி அளித்தனர்.
ராகிங் குறித்து புகார் அளிக்கலாம்: முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புக் குழுக்களிடமும், முதல்வரிடமும் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
அதுதொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1800111154 என்ற இலவச எண்ணிலும், 011 25367033, 25367035, 25367036 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், mci@bol.net.in, contact@mciindia.org என்ற இ மெயில் முகவரிகள் மற்றும் www.mciindia.org  என்ற இணையதளத்திலும், புகார் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com