Enable Javscript for better performance
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

    By DIN  |   Published on : 03rd August 2019 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    இந்த சேர்க்கை ஆன்-லைன் மூலமாக நடத்தப்பட உள்ளது. 
    பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் http://onlineadmission.ignou.ac.in/admission என்ற வலைதளம் மூலமாக சேர்க்கை பெறலாம்.
    மேலும் விவரங்களுக்கு சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தின் மண்டல மையத்தை நேரில் தொடர்புகொள்ளலாம். 
    அல்லது, 044 - 26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழக மண்டல மைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai