Enable Javscript for better performance
சூறைக் காற்று : பாம்பன், ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    சூறைக் காற்று : பாம்பன், ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை

    By DIN  |   Published On : 04th August 2019 01:50 AM  |   Last Updated : 04th August 2019 08:31 AM  |  அ+அ அ-  |  

    RMS

    மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து சூறைக் காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதில் பாக் நீரிணை பகுதியில் கடல் உள்வாங்கி உள்ளது. கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் சனிக்கிழமை தடை விதித்தனர்.

    இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், அந்ததந்த துறைமுகங்களில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் சனிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளன. காற்றின் வேகம் குறைந்தவுடன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மண்டபத்தில் இருந்து ரயில்கள் இயக்கம்: பாம்பன் பகுதியில் 58.2 கி.மீ. வேகத்திற்கு சூறைக் காற்று வீசியதால் வியாழக்கிழமை தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் காற்றின் வேகம் குறையாததால் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

    இதனையடுத்து, சனிக்கிழமையும் மாலை நேரத்தில் காற்றின் வேகம் குறையாமல் இருந்ததால் ராமேசுவரத்தில் இருந்து இயக்க வேண்டிய ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயில், ராமேசுவரம் - சென்னை மெயில் விரைவு ரயில் ஆகிய 2 ரயில்கள் பயணிகள் இன்றி மண்டபம் வரை கொண்டு செல்லப்பட்டன. இதன் பின்னர் ராமேசுவரத்தில் இருந்து ரயில் பயணிகளை 6 சிறப்பு பேருந்துக்கள் மூலம் மண்டபம் ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து அந்த 2 ரயில்களும் இயக்கப்பட்டன.

    இதனையடுத்து, பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் சற்று குறைந்தவுடன் ராமேசுவரம்- சென்னை சேது விரைவு ரயில், ராமேசுவரம் - கன்னியாகுமரி விரைவு ரயில், ராமேசுவரம் - பைசாபாத் விரைவு ரயில் ஆகியன தாமதமாக ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்டன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp