
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சனிக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கிண்டியில் திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலையும் அதன் கீழ் அவரது உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
அந்தப் படத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் விருகை வி.என்.ரவி, மக்களவை முன்னாள் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அரசு தலைமைச் செயலாளர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.