Enable Javscript for better performance
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாகச் சரிவு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாகச் சரிவு

    By DIN  |   Published on : 05th August 2019 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.
     கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது. வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இது சனிக்கிழமை காலை 9 ஆயிரம் கனஅடியாகவும், ஞாயிற்றுக்கிழமை காலை நீர்வரத்து நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai