Enable Javscript for better performance
தனியார் மதுபான நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தனியார் மதுபான நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை

    By DIN  |   Published On : 07th August 2019 02:32 AM  |   Last Updated : 07th August 2019 02:32 AM  |  அ+அ அ-  |  


    வருமானவரி ஏய்ப்புப் புகார் தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த தனியார் மதுபான நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
    தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நா.ஜெயமுருகன். இவர் தூத்துக்குடி, சென்னையில்  லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வந்தார். தமிழக அரசு லாட்டரி சீட்டுக்கு தடை விதித்த பின்னர், மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
     இதன் பின்னர் ஜெயமுருகன், தனக்கு வேண்டிய அரசியல்வாதிகள் உதவியுடன் எஸ்.என்.ஜெ. டிஸ்டிலரிஸ் என்ற பெயரில் மது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. இந்த நிறுவனம் மூலம் தமிழகம், கேரளம், கோவா, ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல மலேசியா, சிங்கப்பூர்  ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
     தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் 15 சதவீத மதுபான வகைகள் இந்த நிறுவனத்தில் தயார் செய்யப்பட்டதே ஆகும். இது தவிர்த்து இந்த நிறுவனம் ஹோட்டல், சர்க்கரை தொழிற்சாலை உள்ளிட்ட வேறு சில தொழில்களிலும் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல இந்த நிறுவனம் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
     இந்நிலையில் இந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமானவரித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அந்தப் புகார்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அந்த நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததற்கான  ஆவணங்கள் சில கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
    40 இடங்களில் சோதனை: 
    இதன் அடிப்படையில், வருமானவரித் துறையினர் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான, தமிழகம், கேரளம், ஆந்திரம், கோவா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 40 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினர்.
    இச் சோதனையில் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். நந்தனம் சிஐடி நகரில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல காஞ்சிபுரத்தில் அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை, நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயமுருகனின் சென்னை வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
    இச் சோதனையில் வரி ஏய்ப்புத் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சோதனை நிறைவு பெற்ற பின்னரே, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், வரி ஏய்ப்புத் தொகை பற்றிய முழு விவரங்களைக் கூற முடியும் என வருமானவரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp