Enable Javscript for better performance
வீட்டுவசதித் துறை செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம்: தமிழக அரசு உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வீட்டுவசதித் துறை செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

    By DIN  |   Published On : 07th August 2019 01:42 AM  |   Last Updated : 07th August 2019 01:42 AM  |  அ+அ அ-  |  

    rajesh


    வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக டி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
    இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதன் விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):
    ராஜேஷ் லக்கானி:  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்தார்).
    சந்திரசேகர் சகாமுரி: நகர் மற்றும் ஊரமைப்புத் துறை இயக்குநர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர்).
    வி.அமுதவல்லி: சுற்றுலாத் துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (சமூகநலத் துறை முன்னாள் இயக்குநர்).
    எம்.மதிவாணன்:  மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத் துறை இயக்குநர் (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர்).
    டி.கார்த்திகேயன்:  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் (நகராட்சி நிர்வாக ஆணையர்).
    வி.சம்பத்: தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர். (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை இயக்குநர்) கடல்சார் வாரிய துணைத் தலைவர் பொறுப்பை அருண் தம்புராஜ் கூடுதலாகக் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp