மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிகக் கன மழை முதல் அதீத கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் கேரளா, மாகே, கர்நாடகாவின் கடற்கரையோர மற்றும் உள் மாவட்டங்களில் இன்று கன மழை முதல் அதீத கன மழை பெய்யும் என்று தெரிவித்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில் ரெட் அலர்ட்  எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

கடந்த ஒரு வாரகாலமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியிருக்கும் தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்துள்ளது. இந்த நிலையில், இன்று அதீத கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த ரெட் அலர்ட் என்பது, மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்படும் ஒரு அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com