தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு: கிரண் பேடி

தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசின் மேல்முறையீட்டினை புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வரவேற்றுள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு: கிரண் பேடி

தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசின் மேல்முறையீட்டினை புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வரவேற்றுள்ளார்.
"புதுவை யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலையிடுகிறார். அதிகாரிகளை அழைத்து தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிப்பதால் அரசின் நிர்வாகம் சீர்குலைகிறது. இது அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் பரிந்துரையை ஏற்று துணைநிலை ஆளுநர் திட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். அவருக்கு சிறப்பு அதிகாரம் ஏதுமில்லை. நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் போன்ற முடிவுகளில் தலையிடுவது நிர்வாகத்தை செயலிழக்க வைப்பது' எனக் கூறி, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில், மத்திய அரசு வழங்கியுள்ள துணைநிலை ஆளுநரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனுடன், "தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம், தன்னிச்சையாக ஆளுநர் செயல்பட முடியாது' என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம், கிரண் பேடி தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 
இதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. "எடுத்தவுடன் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது. சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்' என உள்துறை அமைச்சகத்துக்கும், கிரண் பேடிக்கும் அறிவுறுத்தியது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு படகு பயணத்தை தொடக்கிவைத்த ஆளுநர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்ற வழக்கில் மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
இரண்டு யூனியன் பிரதேசங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் முடிவு முக்கியமானதாக இருக்கும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து புதிதாக விசாரணை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com