சுடச்சுட

    

    ஊருக்குப் போறீங்களா? 30 நிமிடம் முன்னதாக சென்டிரல் வரவும்: காவல்துறை அறிவிப்பு

    By DIN  |   Published on : 13th August 2019 10:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    central


    சென்னை: விரைவு ரயில்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

    ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, சென்னை உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே, பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வரும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் முருகன் கூறியிருப்பதாவது, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளும், பயணிகளும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, பயணிகள் தங்களது ரயில் புறப்பட அரை மணி நேரம் முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்தால்தான் அனைத்து பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டு தங்களது ரயிலைப் பிடிக்க வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai