சுடச்சுட

  

  சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

  By DIN  |   Published on : 13th August 2019 06:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rains-6


  காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மழை வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

  இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, கடந்த 3 நாட்களாக சென்னையின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் மட்டுமே மழை பெய்துள்ளது. இன்று அந்த நிலை மாறுகிறது. மிகச் சரியான வெப்பநிலை, கடற்காற்று என ஒன்றாக சேர்ந்துள்ளது. இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது மட்டுமல்ல, இன்று பரவலாகவே மழை இருக்கும், இதனுடன் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு உண்டு.

  மதுரையில் மழை பெய்ய வேண்டும் என்றால் அதிர்ஷ்டம் வேண்டும். 

  பெங்களூருவில் இன்று முதல் மழை பெய்யும். இன்று முதல் ஒரு வாரத்துக்கு தினமும் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai