ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிப்பது: நளினி வழக்கில் தமிழக அரசு மனு 

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிப்பது என்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினி தொடர்பான வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.
ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிப்பது: நளினி வழக்கில் தமிழக அரசு மனு 

சென்னை: ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிப்பது என்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினி தொடர்பான வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தமனுவிற்கு தமிழக உள்துறைச் செயலாளர் சார்பிலும், வேலூர் மகளிர் சிறைக் கண்காணிப்பாளர் சார்பிலும் பதில் மனு செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில் கூறப்பட்டிருந்ததாவது:

நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரை, தமிழக ஆளுநரின் பரிசீலினையில் உள்ளது. ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே ஆயுள் கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உரிமை கோர முடியாது.

மேலும் ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பதாகும்.

கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது, தண்டனைக் குறைப்பு போன்ற விவகாரங்களில் மாநில அரசின் அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது. முன்கூட்டி விடுதலை செய்வது குறித்துப் பரிசீலிக்கும்படி மட்டுமே அரசுக்கு உத்தரவிட முடியும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வானது வழக்கை ஆகஸ்ட் 20-ம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com