சுடச்சுட

  

  சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை: அப்போ நாளை? வானிலை மையம் விளக்கம்

  By DIN  |   Published on : 14th August 2019 04:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  puviyarasan1


  சென்னை: சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மழைக்கு வாய்ப்பில்லை, நாளை மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது,

  தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியிருக்கும்  மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிதமானது முதல் லேசான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

  தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் பலத்த மழை பெய்யும். 

  கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூரில் 8 செ.மீ. மழையும், வால்பாறையில் 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

  சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை. நாளை எதிர்பார்க்கலாம்.

  மீனவர்களைப் பொறுத்தவரை  அடுத்த 24 மணி நேரத்துக்கு குமரி கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் இன்றைய தேதி வரை பெய்திருக்கும் மழையின் அளவானது 18 சதவீதம் குறைவு. 

  சென்னையைப் பொறுத்தவரை வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 23%. ஆனால் பெய்திருக்கும் மழையின் அளவு 26%. எனவே, சென்னையில் 12% மழை அதிகமாக பெய்துள்ளது என்று தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai