சுடச்சுட

    

    நீலகிரிக்கு முதல்வர் செல்லாதது ஏன்?மு.க.ஸ்டாலின் கேள்வி

    By DIN  |   Published on : 14th August 2019 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin1


    கோயம்புத்தூருக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நீலகிரி செல்லாதது ஏன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
    சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
    கேள்வி: பல ஆண்டுகளாக, மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழகத்துக்கு ஒன்றும் செய்யவில்லை என்று முதல்வர் கூறியுள்ளாரே?
    பதில்:  நீலகிரி சென்று வந்த என்னைப் பற்றி விளம்பரத்துக்காகப் போனேன் என்று முதல்வர் சொன்னார். அவர் அமெரிக்காவுக்கும், லண்டனுக்கும் செல்வதாக ஒரு செய்தி வருகிறது. அவர் விளம்பரத்துக்காகச் செல்கிறாரா என்று கேட்க ரொம்ப நேரம் ஆகாது. அவரைப் போல நிச்சயம் பேச மாட்டேன்.  கோவைக்கு வந்திருக்கிறார்.  அருகில்தான் நீலகிரி இருக்கிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அங்கு நியாயமாக அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அவர் போகவில்லை. இதற்கு எந்தவிதமான பதிலும் அவர் சொல்லவில்லை. முதலில் அவர் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். அதன்பிறகு, நான் பதில் சொல்கிறேன் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai