சுடச்சுட

  

  தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் மீண்டும் வருமா?: ரஜினி 'சஸ்பென்ஸ்' பதில்  

  By DIN  |   Published on : 14th August 2019 07:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajini

   

  சென்னை: தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் மீண்டும் வருமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் 'சஸ்பென்ஸ் ' பதில் அளித்துள்ளார்.

  நடிகர் ரஜினிகாந்த் புதனன்று காலை தனது குடும்பத்தாருடன் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம்  செய்தார்.

  இந்நிலையில் தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் மீண்டும் வருமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் 'சஸ்பென்ஸ் ' பதில் அளித்துள்ளார்.

  நடிகர் ரஜினிகாந்த் புதன் மாலை தனது போயஸ் கார்டன்  இல்லத்தின் வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  காஷ்மீர் விவகாரம் என்பது நாட்டின் பாதுகாப்பு பிரச்னை; காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்தோடு கையாண்டு இருக்கிறார்கள்

  எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியம்.

  நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால்தான்  காஷ்மீர் விவகாரம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டினேன்

  தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது

  தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் வருமா? என்பதை காத்திருந்து பாருங்கள்.

  இவ்வாறு அவர் பதிலளித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai