கேரளத்துக்கு முதல்கட்டமாக  ரூ.10 லட்சம் பொருள்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கேரளத்துக்கு முதல்கட்டமாக  ரூ.10 லட்சம் பொருள்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கேரள மாநில மக்களுக்கு உதவுமாறு திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை லாரி மூலம் எடுத்து வந்து அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்  செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: கேரள மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் கடும் துன்பத்துக்கும், துயரத்துக்கும் ஆளாகியுள்ளனர். 
திமுக சார்பில் முடிந்த அளவுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.  அந்த வேண்டுகோளை ஏற்று முதல்கட்டமாக, சென்னை மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கேரள மாநிலத்துக்காக, அங்கு பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு நிவாரணப் பொருள்களாக 400 மூட்டை அரிசி, 1,880 புடவைகள், 1,185 லுங்கிகள், 800 பெட்ஷீட்கள்,  2,000 தண்ணீர் பாட்டில்கள், 8 பெரிய பெட்டி அளவில் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 38 டிபன் பாக்ஸ்கள் என ஏறக்குறைய ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை அறிவாலயத்தில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து இது போன்ற நிவாரணப் பொருள்கள் வர உள்ளன. அனைத்துப் பொருள்களையும் ரயில் மூலம் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com