திருச்செந்தூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

திருச்செந்தூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
திருச்செந்தூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

திருச்செந்தூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
தமிழக அரசின் சார்பில் திருச்செந்தூரில் கட்டப்பட்டு வரும் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறியதாவது:
முதல்வர் அறிவித்தபடி திருச்செந்தூரில் கட்டப்பட்டு வரும் சிவந்தி ஆதித்தனார் மண்டப  பணிகள் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் நிறைவு பெறும். மணி மண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்க வலியுறுத்துவோம்.
முன்னாள் முதல்வர் அறிவித்த, திருச்செந்தூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கிடப்பில் போடப்படாது. ஆய்வுக்குப் பிறகு அத்திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
நான்குனேரியில் இடைத்தேர்தலை சந்திக்கவும், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவும் அதிமுக தயாராக உள்ளது. இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என  இரண்டிலும் அதிமுக வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தலில்  கூட்டணியில் மாற்றம் ஏதும் இருக்காது.
தமிழகத்தில்  ஆட்சி மாற்றம் வரும் என்றும் இந்த ஆட்சி கலையும் என்றும்  மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் இருந்தே மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். கனிமொழியும், ஸ்டாலினும் ஆட்சி கலையும் என காணும் கனவு வரும் 2021 ஆம் ஆண்டிலும் பலிக்காது என்றார் அவர்.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிரிப்பிரகார மண்டபம் கட்டும் பணி, கடலோர ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் நீதிமன்ற நெறிமுறைப்படி விரைவில் தொடங்கப்படும். பக்தர்கள் தங்குவதற்கான யாத்ரி நிவாஸை, 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தபடி கட்டுவதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
அத்திவரதர் பெருவிழா 48 நாள்களுக்கு மேல் நீட்டிக்கப்படாது என்றார் அமைச்சர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com