நான் தோல்வியடைய காரணம் இதுதான்: ஏ.சி. சண்முகம் பகீர் பேட்டி

எனது வெற்றி நூலிழையில் பறிபோனது, எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார்.
நான் தோல்வியடைய காரணம் இதுதான்: ஏ.சி. சண்முகம் பகீர் பேட்டி


எனது வெற்றி நூலிழையில் பறிபோனது, எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஏ.சி. சண்முகம் செய்தியாளர்களை இன்று சந்தித்த போது கூறியதாவது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் திமுக லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், வேலூர் தேர்தலில் திமுக வேட்பாளர் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அதிமுகவைப் பொறுத்தவரை வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதாகவே கருதப்படுகிறது. ஆனால் என்னால் நாடாளுமன்றம் போகமுடியவில்லை.

தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் முத்தலாக், என்ஐஏ சட்டங்கள் இயற்றப்பட்டன. இதனால், சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். மாலை 4 மணி வரை அவர்கள் வாக்களிக்கவில்லை. ஆனால் சில தலைவர்கள் இறங்கி பணியாற்றியதால் துரதிருஷ்டவசமாக 4 மணிக்கு மேல் வாக்களித்தனர்.

இதனால் நிலைமை மாறியது, ஆம்பூர், வாணியம்பாடி மக்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோற்று இருக்கும். இந்த முறை எனக்கு வாய்ப்பு இருந்தும் வெற்றி கிடைக்கவில்லை. இது வேலூர் மக்களுக்கு ஏமாற்றம். வேலூர் மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பு இல்லாமல் போனது வருத்தம்தான். ஆனால் மக்கள் என்னை கைவிட்டாலும், அவர்களை நான் கைவிடவே மாட்டேன் என்று பதிலளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com