பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடத்த சிபிஎஸ்இ  திட்டம்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணிதத் தேர்வை 2 தாள்களாக நடத்துவதற்கு சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. 


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணிதத் தேர்வை 2 தாள்களாக நடத்துவதற்கு சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. 
இத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் படிக்கும்  பொதுத் தேர்வு மார்ச் 2020-இல் நடக்க உள்ளது. அதற்கான தற்காலிக தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், பத்தாம் வகுப்புக்கான கணக்குப் பாடத் தேர்வை இரண்டு கட்டமாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டு வருகிறது. அதாவது கணக்கு பாடம் தாள் 1, தாள் 2 என நடத்தப்பட உள்ளது.  கணக்கு தாள் 1-இல் அடிப்படை கணக்குகளும், தாள் 2-இல் தரமான கணக்குகளும் இடம் பெறும். பத்தாம் வகுப்புக்கான கணக்கு பாடத்தில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பிரிவை தெரிவிக்க தேர்வு விண்ணப்பத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அதை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com