வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடிசை மாற்றுவாரிய திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டும் குடிசை மாற்றுவாரிய திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடிசை மாற்றுவாரிய திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை


சென்னை: வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டும் குடிசை மாற்றுவாரிய திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கில் இந்த திட்டத்துக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 4710 வீடுகளை கட்டும் திட்டத்தை எதிர்த்து மலைவாழ் மக்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

மனுவில், நிலச்சரிவு மற்றும் வனவிலங்குகள் அபாயம் உள்ள பகுதிகளில் வீடுகள் கட்ட எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெள்ளியங்கிரி மலை அடிவாரம் என்பது யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்று வனத்துறை கூறியிருந்த நிலையில், குடிசை மாற்று வாரியத்தின் திட்டத்துக்கு தடை விதித்ததோடு, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் அளிக்காதவரை, மேற்கொண்டு கட்டடப் பணிகளை மேற்கொள்ளவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com