சுடச்சுட

  

  அத்திவரதர் தரிசனம்: கால அவகாசத்தை  நீட்டிக்க உத்தரவிட முடியாது

  By DIN  |   Published on : 15th August 2019 02:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  HighCourt


  காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்கக் கோரிய வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
  சென்னை உயர்நீதிமன்றத்தில்,  சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர், காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாள்கள் நீட்டிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இதே போல் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாள்கள் நீட்டிக்கக் கோரி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
  இந்த வழக்குகள் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சரே அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரிய மனுக்களைத்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai