சுடச்சுட

  

  அத்திவரதர் தரிசனம்: நாளை பாஸ்கள் செல்லாது என ஆட்சியர் அறிவிப்பு

  By DIN  |   Published on : 15th August 2019 08:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  athivarada

   

  காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 

  இந்நிலையில் அத்திவரதர் தரிசனம் செய்ய நாளை எந்தவித பாஸ்களும் செல்லாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதில் விஐபி, விவிஐபி, ரூ.300 மற்றும் ரூ.500 கட்டண தரிசனங்கள் உள்ளிட்ட எந்த சிறப்பு தரிசனமும் நாளை கிடையாது. பக்தர்கள் பொதுதரிசனம் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

  அத்திவரதர் தரிசனம் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவுடன் நிறைவுபெற உள்ளது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதருக்கு பூஜைகள் செய்யப்பட்டு அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai