சுடச்சுட

  

  காவிரிக் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

  By DIN  |   Published on : 15th August 2019 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார். 
  இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  கர்நாடகம், கேரள மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஆக.13 -ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஆக.16 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி கரையோரக் கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
  காவிரி நீர் வந்து கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுதுபோக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ சுயபடம்  எடுக்கவோ அனுமதி இல்லை. மேலும், தங்கள் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.  மேலும் அந்தந்த வட்டாட்சியர்களைத் தொடர்பு கொள்ளலாம்.  பச-நஙஅதப என்ற செயலி வழியாகவும் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai