சுடச்சுட

  
  thirumalavan

  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் எந்தவிதப் பிளவும் இல்லை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சிக்கு விமானம் மூலம் இன்று வருகை தந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

  கடந்த காலங்களில் நடிகர் ரஜினி, தொடர்ச்சியாக பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆதரவான நிலையிலேயே கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து வரலாற்று துரோகத்தை இழைத்துள்ளது பாஜக.  அதிமுக-வுக்கு தமிழகத்தில் ஒரு குரல். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு குரல் என இரட்டைக் குரலுடன் செயல்படுகிறது.

  மதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை முடிந்துபோன விவகாரம். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் எந்தவிதப் பிளவும் இல்லை. தொடர்ந்து நல்லிணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai