சுடச்சுட

  

  சுதந்திர நாளில் தியாகிகளை போற்றுவோம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

  By DIN  |   Published on : 15th August 2019 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin

  சுதந்திர நாளில் தியாகிகளை போற்றுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

  நாட்டின் 73-ஆவது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து கூறியுள்ளார்.

  இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில்,
  அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம். அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை - மாநில உரிமை - ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai