சுடச்சுட

  

  தமிழகத்தில் 500 புதிய பேருந்துகள் இயக்கம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

  By DIN  |   Published on : 15th August 2019 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cm3


  தமிழகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 500 புதிய பேருந்துகளின் செயல்பாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
  இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
  பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 235 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 118 பேருந்துகளும், விழுப்புரம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 18-ம், சேலம் அரசுப் போக்குவரத்துக்குக் கழகத்துக்கு 60-ம், கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 16-ம், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 25-ம், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தலா 14 பேருந்துகளும் என மொத்தம் 500 புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கும் அடையாளமாக ஏழு பேருந்துகளை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
  1.74 கோடி பயணிகள்: தமிழக அரசின் எட்டு மண்டல போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக நாள்தோறும் 1.74 கோடி பயணிகள் பயன்பெற்று வருகின்றனர். புதிய பேருந்துகள், வழித்தடங்கள் தொடக்கம், புதிய பணிமனைகள், அலுவலகக் கட்டடங்கள், மாணவர்களுக்கு பயண அட்டைகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை போக்குவரத்துத் துறை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
      புதிய பேருந்துகளில் உள்ள சிறப்பம்சங்கள்: பயணிகள் இறங்கும் இடத்தை அறிவித்திடும் ஒலிப் பெருக்கி, மாற்றுத்திறனாளிகள் ஊன்றுகோலை வைக்கும் வசதி,  மாற்றுத்திறனாளிகள் இறங்கும் இடத்தைத் தெரிவிக்கும் ஒலி அழைப்பான், மின்னணு வழித்தட பலகைகள், கழிப்பறை வசதி (அரசு விரைவுப் பேருந்துகளில்) ஓட்டுநருக்கு மின்விசிறி, பேருந்து பின்னோக்கி வருவதை அறிவித்திட ஒலி எச்சரிக்கை கருவி ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai