சுடச்சுட

  
  mettur1

   

  கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கன மழை பெய்து வந்தது. 

  இதனால் கபினி அணையின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வந்தது. கர்நாடக அணைகளின் நீர் வரத்து காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தும் வந்தது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் நீர் தேக்கம் பகுதியில் உள்ள செட்டிப்பட்டி, ஏமனூர், கோட்டையூர், ஒட்டனூர், பண்ணவாடி, நாகமரை பரிசல்துறைகளில் படகுகள் இயக்க தடையும் விதிக்கப்பட்டது.

  இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40,000 கன அடியாக குறைந்தது, அணையின் நீர் இருப்பு 111.400 அடியாக உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai