சுடச்சுட

  

  ராசிமணலில் அணை கட்டுமானப் பணிகளை அரசு தொடங்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

  By DIN  |   Published on : 15th August 2019 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மேட்டூர்  அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்க வேண்டுமானால், ராசிமணலில் அணை கட்டும் பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
  மேட்டூரில்  அணையை புதன்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதனையறிந்த,  8 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்த காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் சம்பா நேரடி விதைப்பு மற்றும்  நாற்றுவிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
  தற்போது வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அûயிலிருந்து விடுவிக்கப்படுவதால், கல்லணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிநீரே வந்து சேரும். கல்லணையிலிருந்து பாசனத்துக்கு காவிரி மற்றும் வெண்ணாறுகளில் முழு பாசன அளவான தலா 9,500 கன அடியும், கல்லணை கால்வாயில் 3,000 கனஅடியும்,  வழியோர மாவட்டங்களுக்கு சுமார்  2 ஆயிரம் கன அடி என  மொத்தம் 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் தேவைப்படும்.  நொடிக்கு 10,000 கனஅடி விடுவிக்கப்படுவதால், பயன்பெறமுடியாத நிலை உருவாகி உள்ளது.     எனவே 15 நாள்கள் வரை தொடர்ந்து நொடிக்கு 25 ஆயிரம் கன அடி  தண்ணீரை விடுவித்து  கடமடைவரை நீரைக் கொண்டு சென்று பாசனத்தை உறுதிப்படுத்தி, சாகுபடிப் பணிகளைத் தொடங்கிடவும்,  ஏரி, குளம், குட்டைகளை நிரப்பிடவும்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  
  மேட்டூர் அணையின் உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்க ராசி மணலில் அணை கட்டுமானப் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai