சுடச்சுட

  

  2021-இல் ஆட்சியைப் பிடிக்க கட்சியை வலுப்படுத்துகிறோம்: கமல்ஹாசன்

  By DIN  |   Published on : 15th August 2019 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  KAMAL


  வரும் 2021-இல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் வகையில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துகிறோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

  இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
  தமிழக அரசியல், மக்கள் நலனை விட்டு விலகியும், சுயநலம் மிக்கதாகவும் மாறியுள்ள ஒரு சூழலில், அரசியல் நாகரிகத்தை மீட்டெடுக்கவும், மீண்டும் மக்களுக்காகப் பாடுபடும் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கிட வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
  அதன் காரணமாகவே  கட்சி ஆரம்பித்த 14 மாதங்களிலேயே மக்களவைத் தேர்தலைத் துணிவுடன் சந்தித்தது. அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான பெரும் ஆதரவை மக்கள் அளித்தனர். அந்த ஆதரவை மேலும் அதிகப்படுத்தி, வரும் 2021-இல் மக்கள் நலன் விரும்பும் ஒரு நல்லாட்சி அமைத்திட, உத்வேகத்துடன் பாடுபடுவதென்று முடிவு செய்துள்ளோம்.
  அதற்காக கட்சியை வலுப்படுத்தும் சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு விரும்பினேன். தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும், கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாகச் சந்திக்கும் வண்ணம் கட்சி நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்தேன். 
  அந்த வகையில்  தலைவரின் கீழ் துணைத்தலைவர், ஆறு பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் இருக்கும் வண்ணம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
   பொதுச்செயலாளர்களாக ஆ.அருணாச்சலம், ஏ.ஜி.மெளரியா, ஆர்.ரங்கராஜன், வி.உமாதேவி, பஷீர் அகமது ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.
  டாக்டர் ஆர். மகேந்திரன் மற்றும் ஏ. சந்திரசேகர் ஆகிய இருவரும் தற்போது  தாங்கள் வகித்து வரும் பொறுப்புகளில், முறையே, கட்சியின் துணைத் தலைவராகவும் பொருளாளராகவும் தொடர்ந்து செயல்படுவர் என்று அவர் கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai