சுடச்சுட

  

  எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிஅதிரடி

  By DIN  |   Published on : 15th August 2019 06:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajenthrabalaji

   

  சென்னை: எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும் என்று தமிழக பால்வளத்துறை  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

  73-ஆவது சுதநதிர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சமபந்தி விருந்துகள் நடத்தப்பட்டன. அவ்வாறு சென்னை திருவொற்றியூரில் இருக்கும் தேவி கருமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் தமிழக பால்வளத்துறை  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

  தமிழக அரசியலில் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு பஞ்சரான ட்யூப் போன்றவர்.

  தேசியமும் தெய்வீகமும் மனதினில் இருப்பதால்தான் மத்தியில் மோடியும் மாநிலத்தில் எடப்பாடியும் ஆட்சி செய்கின்றனர்.

  எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும். இந்த இரண்டு கட்சிகளைத் தவிர தமிழகத்தில் வேறு யாரும் ஆட்சிக்கு வர முடியாது.

  அமைச்சர் பொறுப்பில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டது என்பது முதல்வரின் தனிப்பட்ட உரிமை. இதற்கு கருணாஸின் புகார் காரணம் இல்லை.

  இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai