சுடச்சுட

  

  கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாக பிரித்து அறிவிக்க தயங்குவது ஏன்?  முதல்வருக்கு கொ.ம.தே. கட்சி கேள்வி 

  By DIN  |   Published on : 15th August 2019 05:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  eswaran

   

  சென்னை: கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாக பிரித்து அறிவிக்க தயங்குவது ஏன்? என்று   முதல்வருக்கு கொ.ம.தே.கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  இன்றைய தினம் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து மேலும் இரண்டு புதிய மாவட்டங்களை தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனால் பல ஆண்டுகளாக கோபி மற்றும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்ற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது தொடர்ந்து  கொங்கு மண்டலம்  புறக்கணிக்கப்படுகிறது  என்ற உணர்வு கொங்கு மண்டல மக்களிடையே  உருவாகியிருக்கிறது.

  கோபியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் கோபியை தனிமாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்காமல் பள்ளிகளில் மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது, பொட்டு வைக்க கூடாது என்று நடவடிக்கை மேற்கொண்டு வருவதை மக்கள் வேடிக்கையாக பார்க்கிறார்கள். மற்ற மாவட்டங்களை எல்லாம் நிர்வாக வசதிக்காக இரண்டாக, மூன்றாக பிரித்து அறிவிப்பை வெளியிடும் தமிழக முதலமைச்சர் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாக பிரித்து அறிவிக்க தயங்குவது ஏன் ?.

  எனவே தமிழக அரசினுடைய செயல்பாட்டையும், தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிப்பையும் கொங்கு மண்டல மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு தமிழகத்திலிருக்கும் கொங்கு மண்டல மக்களின் உணர்வுகளுக்கும், கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai