தங்கம் பவுனுக்கு ரூ. 392 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 392 குறைந்து ரூ. 28,624-க்கு புதன்கிழமை விற்பனையானது. சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 392 குறைந்து ரூ. 28,624-க்கு புதன்கிழமை விற்பனையானது. சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்தநிலையில், கடந்த 2-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 27 ஆயிரத்தை தாண்டியது.
இதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 14) பவுனுக்கு ரூ. 29,016-ஆக இருந்தது. இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 392 குறைந்து ரூ. 28,624-க்கு விற்பனையானது. தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 49  குறைந்து ரூ.3,578-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 பைசா குறைந்து ரூ.47.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 குறைந்து  ரூ.47,900 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,578
1 பவுன் தங்கம்    28,624
1 கிராம் வெள்ளி    47.90
1 கிலோ வெள்ளி    47,900
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,627
1 பவுன் தங்கம்    29,016
1 கிராம் வெள்ளி    49.00
1 கிலோ வெள்ளி    49,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com