தமிழக காவல்துறையில் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது: 16 பேருக்கு தமிழக முதல்வர் பதக்கம்

சுதந்திர தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் 23 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 16 பேர் தமிழக முதல்வரின் பதக்கத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது: 16 பேருக்கு தமிழக முதல்வர் பதக்கம்


சுதந்திர தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் 23 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 16 பேர் தமிழக முதல்வரின் பதக்கத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த விவரம்:
சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது, குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருது ஆகியவை மத்திய அரசின் உள்துறையால் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த இரு விருதுகள் தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு கிடைத்துள்ளன.

தகைசால் விருது: இதில் ஆயுதப்படை ஏடிஜிபி ஷங்கர் ஜிவால், கோயம்புத்தூர் காவலர் பயிற்சிப் பள்ளி காவல் உதவி ஆய்வாளர் கே.சபரிநாதன் ஆகிய இருவருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் விருது கிடைத்துள்ளது.

பாராட்டத்தக்கப் பணிக்கான விருது பெற்றவர்கள்: மதுரை சிறப்பு காவல் படை 6-ஆம் அணி தளவாய் த.ஜெயச்சந்திரன், சென்னை க்யூ பிரிவு டிஎஸ்பி ஏ.யாக்கூப், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி எஸ்.உன்னிகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டிஎஸ்பி வி.வி.திருமால், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜி.வி.கிருஷ்ணராஜன், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி  என்.லவகுமார், நீலகிரி மாவட்டம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5-ஆம் அணி உதவி தளவாய் கே.கோவிந்தராஜூ, சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் என்.அருள்மணி,  புதுக்கோட்டை டவுன் காவல் ஆய்வாளர் ஆர்.பரவாசுதேவன், சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் ஆர்.தாமஸ் ஜேசுதாசன், சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வி.சீனிவாசன், செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் ஜி.சௌந்தரராஜன், சேலம் சிபிசிஐடி காவல் உதவி ஆய்வாளர் கே.பாலசகிதர், சென்னை பெருநகர காவல்துறை மத்தியக் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் எம்.மல்லிகா, கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எஸ்.பன்னீர்செல்வம், சென்னை பாதுகாப்புப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜே.சன்னி சக்காரியா, கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எச்.சாகுல்ஹமீது, சென்னை பாதுகாப்புப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஈ.குமாரவேலு, தஞ்சாவூர் காவல்துறை தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரி.ஜே.ராஜா, மதுரை மாநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எம்.சோனை ஆகியோருக்கு விருது கிடைத்துள்ளது.
இவர்களுக்கு விரைவில் புதுதில்லியில் நடைபெறும் விழாவில், இந்த விருது வழங்கப்படும்.

முதல்வரின் காவல் பதக்கங்கள்: இதேபோல் தமிழக அரசு சார்பில் முதல்வரின் காவல் பதக்கங்களுக்கு காவல் துறையைச் சேர்ந்த 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் காவல்துறை அதிகாரிகளின் பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் 6 பேருக்கு வழங்கப்படுகிறது.  அவர்களின் பெயர்கள்:
ரயில்வே காவல் துறையின் டிஜிபி செ.சைலேந்திர பாபு, நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி ப.கந்தசாமி, சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு கூடுதல் ஆணையர் இரா.தினகரன், சேலம் கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் ஜா.நாகராஜன், தஞ்சாவூர் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் சி.செந்தில்குமார், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பக காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் சா.டெய்சி.

தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கம் 10 பேருக்கு வழங்கப்படுகிறது. அவர்களின் விவரம்:
மதுரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி எஸ்.வனிதா, மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி டி.புருஷோத்தமன், சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி எஸ்.கிருஷ்ணன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டிஎஸ்பி  வ.அசோகன், சென்னை பெருநகர காவல்துறையின் பல்லாவரம் காவல் ஆய்வாளர் எஸ்.கிறிஸ்டின் ஜெயசீல், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ப.காசிவிசுவநாதன், திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறையின் திலகர்நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஏ.ஞானசேகர், கோயம்புத்தூர் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் கோ.அனந்தநாயகி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல்  ஆய்வாளர் து.நடராஜன், திருநெல்வேலி சிபிசிஐடி ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் பி.தேவி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இந்த இரு பதக்கங்களையும் பெறுவோருக்கு தலா எட்டு கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேலும் இந்த விருதுகள் தமிழக முதல்வர் பங்கேற்கும் விழாவில் அவர்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com