தமிழகத்துக்கு தேவை இன்னொரு தொல்லியல் வட்டம்!

தமிழ்நாட்டை விடவும் குறைவான தொல்லியல் சின்னங்களைக் கொண்ட ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் தொல்லியல் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளபோது, தென் மாநிலங்களுக்கே முதன்மையான
தமிழகத்துக்கு தேவை இன்னொரு தொல்லியல் வட்டம்!

தமிழ்நாட்டை விடவும் குறைவான தொல்லியல் சின்னங்களைக் கொண்ட ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் தொல்லியல் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளபோது, தென் மாநிலங்களுக்கே முதன்மையான சென்னை வட்டத்தைப் பிரித்து கூடுதலாக இன்னொரு தொல்லியல் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொல்லியல் ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.
 வரலாற்றைக் கண்டறியும், வரலாற்றுக்கான காத்திரமான ஆதாரங்களைச் சேகரிக்கும் மிக முக்கியமானது தொல்லியல் துறை. இந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பு உருவாக்கப்பட்ட (1861) இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஹழ்ஸ்ரீட்ஹங்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் ள்ன்ழ்ஸ்ங்ஹ் ர்ச் ண்ய்க்ண்ஹ) மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தொடர்ந்து தொல்லியல் சின்னங்களைக் கண்டறியவும், பாதுகாக்கவுமான அமைப்பாகும்.
 இந்த அமைப்பு நாடு முழுவதும் 29 தொல்லியல் வட்டங்களையும், 3 குறு வட்டங்களையும் (மினி சர்க்கிள்ஸ்) கொண்டுள்ளது. தமிழ்நாடு- புதுச்சேரி மாநிலங்களுக்கு "சென்னை வட்டம்' என்று பெயர். சென்னை வட்டத்தில் 10 சார்பு வட்டங்கள் (சப் சர்கிள்ஸ்) செயல்படுகின்றன. மிகப்பழைமையான சென்னை வட்டத்தைப் பிரித்து கூடுதலாக ஒரு வட்டத்தை அமைக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து தமிழகத் தொல்லியல் கழகத்தின் பொதுச் செயலர் சு. ராஜவேலு கூறியது:
 ஒரு காலத்தில் சென்னை வட்டத்துடன் இருந்து, பின்னர் பிரிந்து சென்ற ஹைதராபாத் வட்டம், பெங்களூரு வட்டங்கள்தான் இப்போது அங்கே ஹைதராபாத், அமராவதி, பெங்களூரு, தார்வாடு, ஹம்பி (குறுவட்டம்) வட்டங்களாகப் பிரிந்துள்ளன.
 ஆனால், சென்னை வட்டம் (தமிழ்நாடு) மற்ற வட்டங்களைக் காட்டிலும் அதிக தொல்லியல் சின்னங்களைக் கொண்டிருந்தபோதும் பிரிக்கப்படாமல் இருக்கிறது.
 கூடுதல் வட்டங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கிறது. கூடுதல் தொல்லியல் சின்னங்களைக் கொண்ட நமக்கு ஒரேயொரு வட்டத்துக்கான நிதி மட்டுமே கிடைக்கிறது. இந்நிலையை மாற்ற வேண்டுமானால், திருச்சியை மையமாகக் கொண்டு ஒரு தொல்லியல் வட்டத்தை (ஏற்கெனவே திருச்சி சார்பு வட்டமாக உள்ளது) உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக முன்வைத்திருக்கிறோம். ஆனால், இதுவரை எவ்வித முன்னேற்றமும் தெரியவில்லை. மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் ராஜவேலு.
 தார்வார்டு, ஹம்பி வட்டங்கள் பிரிப்பதற்கு முன்பு பெங்களூரு வட்டத்தில் சுமார் 220 தொல்லியல் சின்னங்கள்தான் உள்ளன. அதேபோல, அமராவதி வட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு ஹைதராபாத் வட்டத்தில் சுமார் 250 தொல்லியல் சின்னங்கள்தான் உள்ளன. ஆனால், தற்போதுள்ள சென்னை வட்டத்தில் சுமார் 400 தொல்லியல் சின்னங்கள் உள்ளன.
 இதைப் பிரிப்பதில் மத்திய அரசுக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது என்றும் தொல்லியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய மக்களவை உறுப்பினர்களாவது மக்களவையில் இதற்கான குரலை எழுப்பி தமிழ்நாட்டில் கூடுதல் வட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 புதுக்கோட்டை புதிய வட்டம்!
 திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்தியில், அந்த புதிய வட்டத்துக்கு புதுக்கோட்டையைத் தலைமையிடமாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்படுகிறது.
 இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ. மணிகண்டன் கூறியது:
 திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்ப்பதே பழைய புதுக்கோட்டை சமஸ்தானப் பகுதிகளில் உள்ள 119 தொல்லியல் சின்னங்கள்தான்.
 ஏற்கெனவே திருமயத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருமயம் சார்பு வட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொல்லியல் சின்னங்கள் பராமரிக்கப்படுகின்றன. எனவே, திருமயம் சார்பு வட்டத்தை புதிய வட்டமாகத் தரம் உயர்த்தினாலே போதுமானது. புதிய வட்டம் உருவாக்கப்பட்டு, கூடுதல் நிதியும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் என்கிறார் மணிகண்டன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com