தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகள்: சென்னை மாவட்ட மாணவர்களுக்குப் பரிசு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.


தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
 தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பட்டியல் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன் விவரம்:-
பேச்சுப் போட்டி:  முதல் பரிசு- த.செல்வராஜ்,  முதுகலைத் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகம்,  மெரீனா வளாகம்; இரண்டாம் பரிசு- செ.முரளிதரன்,  முதுகலை கணிதவியல், டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி, வியாசர்பாடி; மூன்றாம் பரிசு- நா.அருண், முதுகலைத் தமிழ்,   உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,  தரமணி.
கவிதைப் போட்டி:  முதல் பரிசு - சி.சிபிசரண்,  முதல் கலைத் தமிழ் இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம்,  மெரீனா வளாகம்; இரண்டாம் பரிசு- கோ.நாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், மாநிலக் கல்லூரி,  காமராஜர் சாலை; மூன்றாம் பரிசு- வெ.கல்பனா,  வணிகவியல், தூய தாமஸ் கலை அறிவியல் கல்லூரி, கோயம்பேடு.
கட்டுரைப் போட்டி:  முதல் பரிசு - வி.அகிலா, முதுகலைத் தமிழ்,   உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,  தரமணி; இரண்டாம் பரிசு- மு.கலைச்செல்வி,  தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்; மூன்றாம் பரிசு- க.நித்யா, காயிதே மில்லத் கல்லூரி.  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம்,  இரண்டாம் பரிசாக 
ரூ.7 ஆயிரம்,  மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் என ரூ.66 ஆயிரம்  வழங்கப்பட்டது.  பரிசுகளை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் வழங்கினார்.  இதில் துணை இயக்குநர் லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com