தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு: பயிற்சி மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் 6 மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.


தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் 6 மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
தருமபுரி, சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் அப்போராட்டத்தில் பங்கேற்றனர். அதன் காரணமாக அந்த மருத்துவமனைக்கு வந்த புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
அதேவேளையில், அவசர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவில் வழக்கம் போல மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட  மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, நாடு முழுவதும் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த ஒரு வாரமாக வகுப்புகளைப் புறக்கணித்து  போராட்டங்களையும், கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், அதற்கு அடுத்தகட்டமாக பயிற்சி மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 6 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அதில் பங்கேற்றனர். தேசிய மருத்துவ ஆணையத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், நெக்ஸ்ட் தேர்வைத் திணிக்கக் கூடாது என்றும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர். அதற்கு அரசு செவிமடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com