வணிகர்களின் பொருள்களை சந்தைப்படுத்த புதிய செயலி

தமிழக வணிகர்களின் பொருள்களை மட்டும் ஆன்லைனில் சந்தைப்படுத்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழக வணிகர்களின் பொருள்களை மட்டும் ஆன்லைனில் சந்தைப்படுத்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சென்னையில் அளித்த பேட்டி: 
இணையதள வணிகம் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கவும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப வணிகர்களை மேம்படுத்தி பாதுகாக்கவும் மெரினா செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் முழுவதும் தமிழக வணிகர்களின் பொருள்கள் மட்டும் விற்பனை செய்யப்படும். இதற்காக தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு அருகே 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் பொருள்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com