வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்டத் தடை

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி, பேரூர் தாலுகாவுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வீடுகள் கட்ட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்டத் தடை


கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி, பேரூர் தாலுகாவுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வீடுகள் கட்ட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத் தலைவரான வி.லோகநாதன்,  குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், ஆலந்துறை, களிமங்கலம் பகுதிகளில் 600 வீடுகளும், தென்கரை கிராமத்தில் 1500 வீடுகளும், பேரூர் செட்டிப்பாளையம் பகுதியில் 2500 வீடுகளும், பச்சனவயல் கிராமத்தில் 70 வீடுகள் என மொத்தம் 4 ஆயிரத்து 710 வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. 
வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் பெருகி வருவதால், எங்களது குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. வனப்பகுதியில் தொடரும் இதுபோன்ற  ஆக்கிரமிப்புகளால் நிலச்சரிவு அபாயம், விலங்குகள் நடமாட்டம், இயற்கை வள பாதிப்பு, மழை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படவும் வாய்ப்புள்ளது. 
மேலும் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளையும் ஆக்கிரமித்து குடியிருப்புகள் சட்ட விரோதமாக கட்டப்படுவதால் இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
 இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக வனத்துறை தாக்கல் செய்த பதில்மனுவில், ஆலந்துறை, செட்டிப்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகளால் கட்டுமானங்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ அல்லது மனித உயிர்கள் பலியானாலோ அதற்கு வனத்துறை பொறுப்பேற்காது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் வனத்துறையிடம் இழப்பீடு கோரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் எம்.புருஷோத்தமன், நகரமைப்பு நிர்வாகத் துறை, மலைப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட துறைகளிடமிருந்து எந்தவொரு ஒப்புதலும் பெறவில்லை. மேலும் விதிகளுக்குப் புறம்பாக இந்த பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 
வனத் துறை வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் என அறிக்கை அளித்துள்ள நிலையில் எப்படி அங்கு குடியிருக்க முடியும் என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் வீடுகள் கட்ட தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com