வேலூரை தொடர்ந்து தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

வேலூரை தொடர்ந்து தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வேலூரை தொடர்ந்து தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

வேலூரை தொடர்ந்து தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து சுதந்திர தின உரை நிகழ்த்திய அவர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்காகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என அறிவித்தார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டரில், வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைக்கும், நீண்ட போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி இதுவாகும்.

வேலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும். இதற்காக மாவட்டங்கள் மறுசீரமைப்பு ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும். சிறிய மாவட்டங்கள் தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com