வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக பெற்றது தோல்வி அல்ல: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வேலூர் மக்களவைத் தொகுதியில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக,வெற்றி பெற்றது. இது அதிமுகவுக்கு தோல்வி கிடையாது என திருத்தணியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக பெற்றது தோல்வி அல்ல: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


வேலூர் மக்களவைத் தொகுதியில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக,வெற்றி பெற்றது. இது அதிமுகவுக்கு தோல்வி கிடையாது என திருத்தணியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செவ்வாய்க்கிழமை இரவு தெரிவித்தார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, திருத்தணி முருகன் கோயிலில், 108 லிட்டர் பாலாபிஷேகம் செய்வதற்காக  திருத்தணி வந்தார். அப்போது, திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம். நரசிம்மன், காஞ்சி- திருவள்ளூர் மாவட்ட ஆவின் தலைவர் வேலஞ்சேரி த. சந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  வேலூர் மக்களவைத் தொகுதி எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனின் சொந்தத் தொகுதியாகும்.  திமுக வேட்பாளர் வெறும் 8,141 வாக்குகள் பெற்று மட்டுமே வெற்றி பெற்றார். இது மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் ஆகும்.
 முஸ்லிம்களை மூளைச்சலவை செய்தும், முத்தலாக் சட்டம், காஷ்மீரின் 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கம் போன்றவற்றால் திமுகவினர் பெற்ற வெற்றி இது. இந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடையவில்லை. இதே தேர்தல் ஒரு மாதம் கழித்து நடந்திருந்தால் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார்.
முத்தலாக் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால், பத்தாயிரம் வாக்குகள் எங்களுக்கு குறைவாக கிடைத்துள்ளது. இஸ்லாமிய சமுதாயத்திற்கு எங்கள் ஆட்சியில்தான் பல்வேறு சலுகைகள் வழங்கியுள்ளோம். இஸ்லாமியர்களுக்காக திமுக எதுவும் செய்யவில்லை. 
 நாட்டு மக்களுக்கு நல்லது என்பதால்தான் காஷ்மீர் பிரச்னையில் தமிழக முதல்வர் ஆதரவு தெரிவித்தார். ஒரே நிலைப்பாடு இல்லாத கட்சி திமுக. தமிழகத்திற்கு லாபம் தரும் எந்த சட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்வார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளை அதிகளவில் உருவாக்க, பாகிஸ்தான் செய்து வரும் முயற்சிகளை தடுக்கவே பிரதமர் மோடி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து, தீவிரவாதத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாயாவதி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com