சுடச்சுட

  

  இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி : முதல்வர் பழனிசாமி சுதந்திர தின உரை

  By DIN  |   Published on : 16th August 2019 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  EPS


  இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக முதல்வர் பழனிசாமி கூறினார். மேலும், தமிழக மக்களைப் பாதிக்கக் கூடிய எந்தத் திட்டமாக இருந்தாலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் நலனைப் பாதுகாப்பதில் அரசு முன்னோடியாக விளங்கும் என்றும் தெரிவித்தார்.

  73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை: 

  சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோதாவரி ஆற்றினை காவிரி ஆற்றுடன் இணைக்கும் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது. 
  இதனால், தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் விவசாயம், குடிநீர் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும். பல்வேறு கோணங்களில் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தமிழகத்தில் கிடைக்கும் நீரில் ஒரு துளி நீரைக்கூட வீணாக்கக் கூடாது என்பதில் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பாதுகாவலனாக பனை மரங்கள் விளங்குகின்றன. இந்த ஆண்டு ரூ.10 கோடியில் 
  2.5 கோடி பனை விதைகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளன.  
  இருமொழிக் கொள்கை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் இருமொழிக் கொள்கையை ஆதரித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹிந்தி பேசாத மாநில மக்கள் மீது அந்த மொழி திணிக்கப்படக் கூடாது என்பதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியுடன் இருந்தார். அதே கொள்கையில் இப்போதும் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
  தமிழக மக்களை பாதிக்கக் கூடிய எந்தத் திட்டமாக இருந்தாலும் அரசு அதனை எதிர்த்து, மக்கள் நலனை பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்கும். 
  நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடி வருகிறோம். 
  இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக தனது உயிரை இழந்த தியாகிகள் பலர் உள்ளனர். 

  தியாகிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு: சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காக்கும் வகையில் அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.15 ஆயிரம் அளிக்கப்பட்டு வருகிறது.  இந்தத் தொகையானது ரூ.16 ஆயிரமாக உயர்த்தி அளிக்கப்படும். இதேபோன்று, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஓய்வூதியத்தை ரூ.7,500-லிருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai